» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 124.31 மி.மீ மழை பெய்துள்ளது : ஆட்சியர் இளம்பகவத் தகவல்

வியாழன் 17, ஏப்ரல் 2025 12:21:04 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.1 முதல் இதுநாள் வரை 124.31 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளதுஎன விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார் . 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (17.04.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 124.31 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 142.396 கனஅடியாகஉள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 300 கன அடியாக உள்ளது.

தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 2.71 மெ.டன், உளுந்து 12.641 மெ.டன்,கம்பு 2.926 மெ.டன்,நிலக்கடலை 2.245 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4073 மெ.டன் யூரியா, 2524 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1510 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 642 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் மற்றும் ளு.ளு.P 552 மெ.டன் இருப்பில் உள்ளன. 

நடப்பு ஏப்ரல், 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 1000 மெ.டன் யூரியா, 1055 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 300 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 525 மெ.டன் யூரியா 125 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 650 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்-வேளாண்மைத்துறை: 2023-2024ம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரிபயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூ.61.52 கோடி,பாசிப்பயறுக்கு ரூ.17.55கோடி, மக்காச்சோளத்திற்கு ரூ.91.07 கோடி,கம்புபயிருக்கு ரூ.9.44 கோடி, சோளப்பயிருக்கு ரூ.6.71கோடி,நிலக்கடலை பயிருக்கு ரூ.0.12 கோடி,எள் பயிருக்கு ரூ.0.047கோடி,சூரியகாந்தி பயிருக்கு ரூ.3.037 கோடி மற்றும் நெல்-III பயிருக்குரூ.10.65 கோடி மற்றும் பருத்தி பயிருக்கு ரூ.2.966 கோடி ஆக மொத்தம் ரூ.203.13 கோடி காப்பீட்டுத் தொகை இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் 78215 விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 

திருந்திய பிரதம மந்திரிபயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 140847 ர்ய ராபி பருவ பயிர்களுக்கு 104446 விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டிற்குரிய பயிர் அறுவடை பரிசோதனைகள் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அனைத்து அறுவடை பரிசோதனைகளும் வேளாண்மைத்துறை, பொருளாதார மற்றும் புள்ளிவிவர துறை அலுவலர்களாலும் பயிர் காப்பீடு நிறுவன களப்பணியாளர்களாலும் பயிரிடும் விவசாயிகள் முன்னிலையில் நடத்தப்பட்டு மகசூல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்- தோட்டக்கலைத்துறை: தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி 2023 வருடத்திற்கான பயிர்காப்பீடு இழப்பீடுதொகை நிவாரணமாக பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு வாழை, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு ரூ.68.21 கோடி இழப்பீட்டுத்தொகையானது 76954 விவசாய பதிவு எண்களுக்கு இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வேளாண் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் திருவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வாழை பழுக்க வைக்கும் கூடம் ஆகியவற்றினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் விநியோக தொடர் சேவைகள், கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், குளிர்பதன தொடர் சேவைகள், தளவாட வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல், மின்னணு சந்தையுடன் கூடிய விநியோகத் தொடர், சூரிய மின் சக்தியுடன் கூடிய உட்கட்டமைப்பு, பழுக்க வைக்கும் அறைகள் போன்றவற்றை அமைக்க விரும்பும் பயனாளிகளுக்கு 3% வட்டி சலுகை வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அளிக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையினை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறுகியகால மற்றும் மத்திய கால கடன்கள் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 11.04.2025 வரை ரூ.263.50 கோடிக்கு 22562 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16554 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.194.28 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் , இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன் , செயற்பொறியாளர் தாமிரபரணி வடிநிலக்கோட்டம் வசந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory