» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவனை கொலை செய்தவருக்கு வாழ்நாள் சிறை : தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:22:56 AM (IST)
6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வடக்கு முத்தலாபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ் (31). இவா், கடந்த 2019இல் எட்டயபுரம் காவல் சரகப் பகுதியில் 6 வயது சிறுவனை பாலியல் வன்புணா்ச்சி செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான புகாரின்பேரில், போக்ஸோ சட்டம், கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவா் எட்டயுபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் விசாரித்து அருண்ராஜுக்கு கொலை, வன்கொடுமை குற்றங்களுக்காக தனித்தனி ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 அபராதம் ஆகிய தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பூவநாதர் சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 2:10:54 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு : கும்பாபிஷேகம் குறித்து தகவல்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:08:50 PM (IST)

நுகர்வோருக்கு ரூ.25.35 இலட்சம் நஷ்ட ஈடு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:32:37 AM (IST)

சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வாலிபர் பலி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:18:00 AM (IST)

தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:56:28 AM (IST)
