» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)
தூத்துக்குடி அருகே பழைய வீட்டை இடிக்கும் போது சுவர் இடிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் முத்து கருப்பசாமி (42), இவர் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவரும் புதியம்புத்தூர் சுந்தரலிங்க நகரை சேர்ந்த பிச்சையா மகன் நாராயணன் (35) ஆகிய 2 பேரும் இன்று சுந்தர லிங்கம் நகரில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது திடீரென அந்த வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் இருவரும் இடுபாடுக்குள் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டனர். இதில் முத்துக் கருப்பசாமி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நாராயணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பூவநாதர் சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 2:10:54 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு : கும்பாபிஷேகம் குறித்து தகவல்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:08:50 PM (IST)

நுகர்வோருக்கு ரூ.25.35 இலட்சம் நஷ்ட ஈடு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:32:37 AM (IST)

சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வாலிபர் பலி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:18:00 AM (IST)

தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:56:28 AM (IST)
