» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

ஆத்தூரில் 2 புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரிலிருந்து வெள்ளக்கோவில் வரை, வரண்டியவேல் வழியே குரும்பூா் வரை ஆகிய 2 புதிய பேருந்துகளையும், ஆத்தூா் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்காக 15ஆவது நிதிக்குழு மானியம் 2023-24ஆம் ஆண்டு திட்டத்தில் ரூ. 12 லட்சத்திலான 2 புதிய மினி டிப்பா் லாரிகளையும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்துத் துறையின் தூத்துக்குடி கோட்ட மேலாளா் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் பணிமனை மேலாளா் ஜெகதீசன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலாத்தூா் வழியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் அந்த வழியோரக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 7:37:45 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:55:27 PM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்க பயிற்சி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:46:06 PM (IST)

கோவில்பட்டி பூவநாதர் சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 2:10:54 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு : கும்பாபிஷேகம் குறித்து தகவல்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:08:50 PM (IST)
