» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:39:55 AM (IST)

பிரதமர் மோடியை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான புதிய வக்பு வாரிய சட்டங்களை திரும்ப பெற கோரியும், இந்தி திணிப்பு, கட்டாய முன்மொழிக் கொள்கை, புயல், பள்ளிக் கல்விக்காக முக்கிய நிதியை வழங்காமல் இருப்பது கிராமப்புற ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை கண்டித்து தூத்துக்குடியில் வி.வி.டி. சிக்னல் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ, மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளீதரன் ஆகியோர் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் ராஜ், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், செந்தூர்பாண்டி, மாநகர துணை செயலாளர் குமார முருகேசன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஷாஜகான், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல் ஞானதுரை, இருதயராஜ், மாநகர துணை செயலாளர் முத்து விஜயா, காங்கிரஸ் நிர்வாகிகள் நாராயணசாமி, பிரபாகரன், பார்த்தசாரதி, தெற்கு மாவட்ட வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, ஜெயசீலன், ஜெயராஜ், தாசன், சந்திரசேகர், சத்குரு, பாலசிங், நிர்வாகிகள் கருப்பசாமி, முத்து, மணி, பெரியசாமி, ஜெனி, ரஜினி முருகன், எடிசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 7:37:45 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:55:27 PM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்க பயிற்சி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:46:06 PM (IST)

கோவில்பட்டி பூவநாதர் சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 2:10:54 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு : கும்பாபிஷேகம் குறித்து தகவல்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:08:50 PM (IST)

300 pera?Apr 6, 2025 - 01:26:36 PM | Posted IP 162.1*****