» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:30:41 AM (IST)

வக்பு சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத நல்லிணக்கத்திற்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வக்ப் சட்ட திருத்தத்தினை முழுமையாக திரும்ப பெற மத்திய அரசினை வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட துணைசெயலாளர்கள் சிவனேஸ்வரன், முத்துக்கனி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஸ்கர், திருச்செந்தூர் நகர செயலாளர் முருகானந்தம் , உடன்குடி ஒன்றிய செயலாளர் பிரசாத், திருச்செந்தூர் குட்டி, ஆழ்வை ஒன்றியம் குட்டி ராஜா, ஆறுமுகநேரி நகர செயலாளர் நிவாஸ் கண்ணன் , காயல்பட்டினம் நகர செயலாளர் ஹனிபா, புன்னைக்காயல் சேவியர், வீரபாண்டியன்பட்டிணம் சர்க்கார் மதன், அமலிநகர் விவேக், வழக்கறிஞர் அணி ராஜிவ் காந்தி, உடன்குடி ஹசன், மகளிரணி விபினா, ஆனந்தி, பிளெஸ்ஸி, அபர்ணா மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட, திருச்செந்தூர் சட்டமன்ற, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சுமார் 400 பேருக்கும் மேல் திரளாக கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 7:37:45 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:55:27 PM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்க பயிற்சி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:46:06 PM (IST)

கோவில்பட்டி பூவநாதர் சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 2:10:54 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு : கும்பாபிஷேகம் குறித்து தகவல்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:08:50 PM (IST)
