» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை : கனிமொழி எம்பி பேட்டி
சனி 5, ஏப்ரல் 2025 3:52:05 PM (IST)
வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என கனிமொழி எம்பி கூறினார்.
தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியில், "வக்ஃப் திருத்த மசோதா சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கொண்டு வந்திருக்கக்கூடிய மசோதா. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் இந்த மசோதாவை மறுபடியும் கொண்டு வந்து அவர்களுக்கு இருக்கக்கூடிய பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இன்று அத்தனை எதிர்க்கட்சிகளும் எதிர்த்து உள்ளோம்.
யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக முதல்வர் இதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். நிச்சயமாக அதிகப்படியானவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அங்கேயாவது நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம். இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையேயான சமூகமான பேச்சுவார்த்தையை பிரதமர் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2பேர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:09:59 PM (IST)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:44:24 AM (IST)

தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:35:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயற்சி: 7பேர் கும்பல் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:19:49 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:23:50 AM (IST)

குளத்தில் பெண் உடல் மீட்பு: போலீஸ் விசாரணை
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:14:34 AM (IST)
