» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு : குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இறக்குமதி

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:26:16 AM (IST)

கோடை மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கன்டெய்னர் மூலம் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிவடைந்த உடன் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் புதிய உப்பு வரத்தொடங்கியது. அதே நேரத்தில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் முழுவீச்சில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடியில் போதுமான அளவு உப்பு இல்லாததால் விலையும் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் ராகவன் கூறியதாவது: உப்பு உற்பத்தி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் குஜராத்தில் இருந்து கன்டெய்னர்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் டன் உப்பு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது. 

இதுதவிர ஒரு கப்பலில் 35 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து தென்மாநிலங்களுக்கு உப்பு உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தில் இருந்து ஒரு டன் உப்பு ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இது உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் இடையே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory