» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயற்சி: 7பேர் கும்பல் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:19:49 AM (IST)
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வீடுபுகுந்து பைக்கை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தியதாக 7பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரகாஷ் ஆதரவாளான கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவைச் சேர்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (23) என்பவரை கொலை செய்வதற்காக அவர தேடி அண்குமார் உட்பட 7பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர் அங்கு இல்லாததால் அவரது பைக் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்களாம். இது குறித்து முத்து சிவா அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக அருன்குமார், தாளமுத்துநகர் ராம்தாஸ் நகர் மகாலிங்கம் மகன் சுடலை (25), கந்தசாமி புரம் முருகன் மகன் கரன் (24), சுந்தரவேல் புரம் 5வது தெரு, கோபாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (20), வேப்பலோடை நடராஜபுரம் காளிமுத்து மகன் தங்கமாரியப்பன் (26), சுந்தரவேல்புரம் 3வது தெரு சங்கர் மகன் செல்வமணி (20), சுந்தரவேல்புரம் 7வது தெரு ஆறுமுக நயினார் மகன் வீரமணி (26) ஆகிய 7பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 7பேர் மீதும் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










