» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நேர்மையான எஸ்.ஐ.யை மாற்ற கூடாது : பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்!
சனி 5, ஏப்ரல் 2025 3:17:31 PM (IST)
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் முத்தமிழரசனை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என பாஜக உறுப்பினர் காசிலிங்கம் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்துள்ள மனுவில், "கடந்த சில நாட்களாக நேர்மையான காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மாநகரத்தில் சில போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தெற்கு காவல் நிலையத்தில் உண்மையாக பொதுமக்களுக்காக சேவையாகவும் உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் அவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.
சில அரசியல்வாதிகளால் தவறான தொழில் செய்யும் நபர்களால் நேர்மையான காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்கிறார்கள். இந்த காவல்துறை அதிகாரிகளால் பொதுமக்கள் இளம்பெண்கள் இளைஞர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தயவு செய்து மீண்டும் உதவி ஆய்வாளர் முத்தமிழரசனை மீண்டும் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2பேர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:09:59 PM (IST)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:44:24 AM (IST)

தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:35:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயற்சி: 7பேர் கும்பல் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:19:49 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:23:50 AM (IST)

குளத்தில் பெண் உடல் மீட்பு: போலீஸ் விசாரணை
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:14:34 AM (IST)
