» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை
சனி 5, ஏப்ரல் 2025 8:01:44 AM (IST)
கோவில்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தோனுகால் கிராமம் முதல் தெருவை சோ்ந்தவா் சுந்தரராஜ் மனைவி ருக்மணி அம்மாள் (78). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். நேற்று முன்தினம் அவரை கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தேடியபோது, அவரை காணவில்லையாம். இதையடுத்து, அவா் கோயம்புத்தூரில் உள்ள மகன் சுரேஷுக்கு தகவல் தெரிவித்தாராம்.
இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்த சுரேஷ், தாயை தேடியபோது படா்ந்தபுளியில் உறவினா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ருக்மணி அம்மாள் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2பேர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:09:59 PM (IST)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:44:24 AM (IST)

தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:35:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயற்சி: 7பேர் கும்பல் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:19:49 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:23:50 AM (IST)

குளத்தில் பெண் உடல் மீட்பு: போலீஸ் விசாரணை
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:14:34 AM (IST)
