» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:40:59 PM (IST)

கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்பபந்தன திருக்குட நன்னீராட்டு பெரும் சாந்தி பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீ நல்லதவம் செய்த நாச்சியார் சமேத வீரபாண்டீஸ்வரர், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெரும்சாந்தி பெரும் விழா ஏப். 1ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இன்று வெள்ளிக்கிழமை ஏப்.4ஆம் தேதி காலை 4மணிக்கு பிம்ப சுத்தி, ரக்ஷா பந்கனம், 7.30 மணிக்கு 4ஆம் கால யாகவேள்வி, மூலாலய மூர்த்திக்கு பீட பூஜை, தொடர்ந்து நல்ல தவம் செய்த நாச்சியார் சமேத வீரபாண்டீஸ்வரர், சிவகாமி அம்மாள், சமேத அழகிய கூத்தர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தசவித தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்றது. 12மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மதியம் 1மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், உதவி கோட்ட பொறியாளர் அஸ்வினி, உதவி பொறியாளர் சதீஷ், சாத்தான்குளம் இந்து சயம ஆய்வாளர் முத்துமாரியம்மாள், ஆழ்வார் திருநகரி கோவில் அலுவலர்கள் முத்துராஜ், வைத்தியமாநிதிபெருமாள் உட்பட மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 5மணிக்கு சுவாமி அம்மாள்திருக்கல்யாணம், தீபாராதனை, பஞ்சமூர்த்தி திருவீதி உலா எழுந்தருளல் நடந்தது.முன்னதாக ஸ்ரீஅழகிய கூத்தர் அருள்பணி மன்றத்தினரின் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி செயல் அலுவலர் சதீஷ், கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயில் அறங்காவலர்குழு தலைவர் நடராஜன்பிள்ளை ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமசாமிபுரம் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்க நடவடிக்கை: ஆட்சியரிடம் சமக கோரிக்கை!
திங்கள் 7, ஏப்ரல் 2025 9:25:32 PM (IST)

ஹோட்டல் கழிவு நீர் தொட்டியில் விழுந்த குழந்தை : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:44:29 PM (IST)

மகாவீர் ஜெயந்தி விழா: ஏப்.10ல் டாஸ்மாக் கடகளை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:33:52 PM (IST)

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:26:59 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:51:23 PM (IST)

மீன், இறால் நோய்களைக் கண்டறிதல் பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அழைப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:47:05 PM (IST)
