» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி

திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. 

தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி  சென்னையில் 24ம் தேதி நிழல் இல்லா நாளாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்-11ம் தேதி திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏப்.12ம் தேதி தூத்துக்குடி, ஏப்.13ம்தேதி கோவில்பட்டியிலும் நிழல் இல்லா நாளாகும்.

இதனை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்கள் வட்டமாக தரையில் நின்றும்  குச்சியை ஒரு வட்ட வடிவில் உள்ள அட்டையின் மைய பகுதியில் ஊன்றியும் நிழலை அளந்து பயிற்சி பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன்முன்னிலை வகித்தார்.உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி  கலந்துகொண்டு நிழல் இல்லா நாள் மற்றும் வானவியல் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட ஏராளமான மாணவிகள்  கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education






Thoothukudi Business Directory