» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார்

சனி 12, ஏப்ரல் 2025 5:48:23 PM (IST)



தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் ஹாக்கத்தான் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார். 

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் சைபர் ஹாக்கத்தான் (Cyber Hakathon) என்ற போட்டி கடந்த 04.03.2025 அன்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் மற்றும் சாலை பாதுகாப்பு போன்றவை சம்பந்தமான 6 தலைப்புகள் அறிவிக்கப்பட்டு, சைபர் கிரைம் முகவரியில் சமர்ப்பித்த படைப்புகளில் இருந்து கடந்த 11.03.2025 அன்று முதல் கட்ட வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முன்மாதிரியான படைப்புகள் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவிற்கு அனுப்பப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு இன்று (12.04.2025) தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் 18 குழுக்களாக பங்கு கொண்டு தங்களது படைப்புகளை வெளியிட்டனர். இதில் சிறந்த படைப்புகளை கொடுத்து வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த சேர்ந்த ஈரோடு பண்ணாரி அம்மன் கல்லூரி சார்பாக கலந்து கொண்ட ரோகித் குழுவிற்கு முதல் பரிசாக ரூபாய் 70ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரி சார்பாக கலந்து கொண்ட ஆல்வின் இம்மானுவேல் குழுவிற்கு 40ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த சென்னை, புனித ஜோசப் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட மிதுன் பிரகாஷ் குழுவிற்கு ரூபாய் 25ஆயிரம் மேலும் சிறந்த படைப்புகளை படைத்த மூன்று குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூபாய் 5ஆயிரமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப வழங்கி, மேலும் இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சமூக நலத்துறை அதிகாரி நிவேதா, வ.உ.சி பொறியியல் கல்லூரி முதல்வர் பீட்டர் தேவதாஸ், சைபர் தடயவியல் பிரிவு அதிகாரி சைலேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory