» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தரிசனம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:21:49 PM (IST)
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், கடல் மற்றும் நாலு கிணற்றில் புனித நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அதிகமான பக்தர்களின் வருகையையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பழனி, மருதமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:51:22 PM (IST)

தூத்துக்குடி அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு : தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:28:52 PM (IST)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான மகளிர் உதவி எண்.181 தொடர்புக் கொள்ளலாம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:23:51 PM (IST)

சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி: மீன்வளக் கல்லூரி அழைப்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:03:29 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்றம்: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 4:34:08 PM (IST)

தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வியாழன் 17, ஏப்ரல் 2025 12:53:13 PM (IST)
