» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமத்துவநாள் விழாவில் ரூ.13.74 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் : அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:19:57 PM (IST)

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ரூ.13.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் விழாவினை - சமத்துவநாள் முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று(14.04.2025) புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றியதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.33,00,000/- மதிப்பிலான வீட்டு மனைப்பட்டாக்களையும், 6 பயனாளிகளுக்கு ரூ.43,680/- மதிப்பிலான சலவைப் பெட்டிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.2,46,593/- மதிப்பிலான வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஓய்வூதியத்தினையும், தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.37,10,058/- மதிப்பிலான முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் Tourister Vehicle-னையும், 1 பயனாளிக்கு ரூ.6,34,500/- மதிப்பீட்டில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் Photo Studio அமைப்பதற்கான மானியத்தினையும், 5 பயனாளிகளுக்கு தூய்மைப்பணியாளர்களுக்கான அடையாள அட்டையினையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1203 பயனாளிகளுக்கு ரூ.12,03,00000/- மதிப்பிலான E-பட்டாக்களையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.71,30000/- மதிப்பிலான பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5,00,000/- மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளையும், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதாளச்சாக்கடை சுத்தம் செய்பவர்கள் என 30 நபர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் ஆக மொத்தம் 1313 பயனாளிகளுக்கு ரூ.13.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது:அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என உத்தவிட்டதற்கு ஏற்ப நம்முடைய மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியினை தற்போது நேரலையில் நாம் பார்த்தோம். டாக்டர் அம்பேத்கர் நம்முடைய அரசியல் சட்டத்தை இயற்றியவர். 1950ல் நமது நாடு குடியரசு நாடான போது நமது இந்தியாவிற்கென ஒரு சட்டம் வடிவமைத்தவர் நம்முடைய டாக்டர் அம்பேத்கார் ஆவார்.
அவர் ஒரு மிகப்பெரிய சட்ட மேதை, பேராசான், உரிமைப் போராளி என போற்றப்படுபவர். அவர் சட்டத்தை எழுதும்போதே பெண்களுக்கும் நாம் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆதிதிராவிட மக்களுக்கு கட்டாயமாக நாம் உதவி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும் என்பது சட்டத்திலே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையாக இருக்கிறது. அதனை நமது தமிழ்நாடு முதலமைச்சர், பொறுப்பேற்றதிலிந்து எல்லாருக்கும் எல்லாம் என்ற முறையிலே எல்லா மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும், குறிப்பாக ஆதிதிராவிட மக்களுக்கு அதிக உதவி செய்ய வேண்டும், பெண்களுக்கு அதிக அளவிலே உதவி செய்து அவர்களுடைய வாழ்வாரத்தை மேம்படுத்திட வேண்டும், தமிழகத்தினுடைய அத்தனை பகுதிகளும் மேம்பாடு அடைந்து வளர்ச்சி அடைய வேண்டும், தொழில் நிறுவனங்கள் தொடங்கிட வேண்டும் என்று ஒரு உன்னதமான நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய புகழ் பாடப்பட வேண்டும், பெருமை பேசப்பட வேண்டும் என அவர்களுடைய பிறந்தநாளான இன்று தமிழகமெங்கும் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதைத்தொடர்ந்து, கிட்டத்தட்ட ரூ.104 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் நம்முடைய மாவட்டத்திலும் ரூ.13.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு பல்வேறு அரசு திட்டங்களை பெற்று பயனடையுங்கள். நமது தமிழ்நாடு முதலமைச்சர் வந்த பின்பு அனைத்து விடுதிகளிலும் நவீன முறை வசதிகள் அனைத்தையும் மாணவர்களுக்கு உருவாக்கிக் தரவேண்டும் என்ற முறையிலே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று உயர் கல்வி பயில்வதற்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது என்பதையும் கூறிக்கொண்டு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜா.பென்னட் ஆசிர், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் சொர்ணலதா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஜெனிஷிஸ்.ம.ஷியா, தனிவட்டாட்சியர்(ஆ.தி.ந) கோவில்பட்டி அ.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பல் மாலுமி வெட்டிக்கொலை : 3 பேர் கும்பல் வெறிச்செயல் - தூத்துக்குடியில் பயங்கரம்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 11:42:32 AM (IST)

தூத்துக்குடி தேவாலயங்களில் ஈஸ்டர் பிரார்த்தனை : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 11:30:07 AM (IST)

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்ஸோவில் கைது!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:39:50 AM (IST)

பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:38:27 AM (IST)

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:32:36 AM (IST)

தனியார் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு: வடமாநில வாலிபர் கைது!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:29:15 AM (IST)
