» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் தீ தொண்டு நாள் வாரவிழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:23:54 PM (IST)

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தீ தொண்டு நாள் வாரவிழா காந்தி மைதான வளாகத்தில் நடந்தது.
தீ விபத்தில்லா உலகை உருவாக்கிடவும்,தீ விபத்தின் போது பணிபுரிந்து உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறவும்,தீயணைப்பு வீரர்களின் சேவையை பாராட்டவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஏப்ரல்20ம் தேதி வரை தீ தொண்டு நாள் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் நடந்த தீ தொண்டு நாள் நிகழ்விற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரகண்ணன் தலைமை வகித்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலர் ராஜேந்திரன், ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இதில் பொது மக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, நடராஜன், முத்துமுருகன்,ராஜேந்திரன்,பழனிக்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) மலையாண்டி,முன்னணி தீயணைப்பு வீரர் இசக்கிராஜா,உள்பட தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 7:02:29 PM (IST)

காரணம் இல்லாமல் அபராதம் விதித்ததாக லாரி ஓட்டுநர் பேசிய செய்தி : காவல்துறை மறுப்பு!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 6:58:30 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 6:46:51 PM (IST)

கப்பல் மாலுமி வெட்டிக்கொலை : 3 பேர் கும்பல் வெறிச்செயல் - தூத்துக்குடியில் பயங்கரம்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 11:42:32 AM (IST)
