» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 6:46:51 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது 10,11,12-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் குடும்பம், குடும்பமாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
அவர்கள் காலையில் இருந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நிறுத்த வசதியாக போக்குவரத்து போலீசார் ஆங்காங்கு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்திருந்தனர். கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்நது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










