» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த புகழ், சரவணன் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி ஏற்பாட்டில் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி - எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அவைத் தலைவர் ஜேசுதாஸ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், வட்டச் செயலாளர் சுரேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










