» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குடிநீர் திட்டப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
சனி 12, ஏப்ரல் 2025 8:03:54 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றும் வரும் குடிநீர் திட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக சிவந்தாகுளம் பிரதான சாலையில் தற்போது நடைபெற்று வரும் கதிர்வேல் நகர் பகுதியில் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளையும், சுப்பையா வித்யாலயம் பள்ளி அருகில் பணிகள் நிறைவுற்ற குடிநீர் வாழ்வு மாற்றும் பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், டீச்சர்ஸ் காலனி பகுதியில் ஒரு சில வீடுகளில் முறையாக குடிநீர் வரவில்லை என்று மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை தொடர்ந்து அதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின் போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவலரின் தாய் கொலை வழக்கில் பெண் கைது: நகை மீட்பு - பரபரப்பு தகவல் !
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:14:03 AM (IST)

ஆக்கி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:06:44 AM (IST)

தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 10:21:08 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:59:51 AM (IST)

பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் : வாலிபர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:32:20 AM (IST)

விளாத்திகுளம் அருகே பொன் ஏர் பூட்டும் திருவிழா
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:23:41 AM (IST)
