» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:59:51 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரை சோ்ந்தவா் ஸ்ரீராம் என்ற வெள்ளையன்(24). இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தபோது, 3பேர் மதுபோதையில் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரண நடத்தினார். இதில், தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த சுடலைமுத்து மகன் மதன்குமார் (23), 3வது மைல் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மாலைக்கனி (23) கண்ணன் மகன் சிவா (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





