» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவலரின் தாய் கொலை வழக்கில் இளம்பெண் கைது : நகை மீட்பு - பரபரப்பு தகவல் !
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:14:03 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாயை கொலை செய்த வழக்கில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்த ஜெயபால் மனைவி வசந்தா (70). மகன் விக்ராந்த், நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ஜெயபால் இறந்து விட்டதால் வசந்தா தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வசந்தா தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் திருடுபோயிருந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜான் ஆல்பட்ஜான் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக டிஐஜி சந்தோஷ் ஹதிமனி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பேய்குளம் அருகே உள்ள மீரான் குலத்தைச் சேர்ந்த செல்வ ரதி (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. அங்கிருந்து ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட வசந்தா வீட்டில் எலுமிச்சம்பழம் மரம் வளர்த்து வந்துள்ளார். மேலும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளார்.
வசந்தாவின் வீட்டில் எலுமிச்சம்பழம் மற்றும் கோழிகளை செல்வரதி திருடி சென்றுள்ளார். இதை தட்டி கேட்ட வசந்தாவிடம் தகராறு செய்து அவரை வீட்டுக்குள் கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு கொலையை மறைப்பதற்காக 6 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் நகைகளை மீட்டனர். மேலும். அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










