» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 10:21:08 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., மார்க்கெட்டில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாரதி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பழம் மகன் மணிராஜ் (52), இவர் அந்தோணியார் கோவில் அருகில் உள்ள வ.உ.சி., மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10:30 மணியளவில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை 7மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார்.
அப்போது கடையின் ரோலிங் ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.4ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. மேலும் பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் மணிராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் 4 வாசல்கள் உள்ளது. அனைத்து வாசல் கதவுகளும் பூட்டப்பட்டு இரவு காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதான கேட் வழியாக மட்டும்தான் வியாபாரிகள் இரவு நேரங்களில் உள்ளே சென்று லாரியில் வரும் பொருட்களை இறக்கி வைக்க முடியும். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் மார்க்கெட் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
