» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்
சனி 12, ஏப்ரல் 2025 5:00:17 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் த.கனகராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புக் கல்வி பற்றியும், கல்வியியல் பயின்ற மாணவர்கள் என்னென்ன போட்டித் தேர்வுகளை எவ்வாறு எளிதாக எழுதலாம் என்பதை உளவியல் அறிஞர் கார்டனின் நுண்ணறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினார்.
மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இறுதியாக வரலாற்று துறை பேராசிரியர் கு.இராஜதுரை நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)

மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)
