» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)



"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் நேரத்தில் எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்" என்று நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி.ராஜா கூறினார். 

நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி.ராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாம் இந்தியர் கட்சியின் மாநிலச் செயலாளர் பொன்ராஜ், மாநில பொருளாளர் ஜெயகணேஷ் உள்ளிட்ட நாம் இந்தியர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி.ராஜா கூறியதாவது;  நாம் இந்தியர் கட்சி தமிழகத்தை நிர்வாகம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. கட்சி ஆரம்பித்து கடந்த ஏழு வருடங்களாக நாம் இந்தியர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருகிறது. 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் இந்தியர் கட்சி உறுதியாக போட்டியிடும். 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் நாம் இந்தியர் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தின் தற்போதைய தேர்தல் நிலையானது பிரம்மாண்டமான தேர்தல் திருவிழா, அன்பளிப்புகள் என்ற நிலையே நீடிக்கிறது. தேர்தல் சமயங்களில் ஆளுகிற கட்சியோடு கூட்டணி அமைத்து கொண்டால் தான் மக்களுக்கான திட்டங்களை தடையில்லாமல் கொண்டு போய் சேர்க்க முடியும். தமிழகத்தில் இரண்டு பெரிய  கூட்டணி அமைந்துள்ளது. 

விஜய் செல்வாக்கான நடிகர் அவரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். தோல்வியை சந்திக்க தயாரான அரசியல்வாதிகள் மட்டுமே தமிழகத்தில் நிலைக்க முடியும். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் நேரத்தில் எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்காக போய் நிற்கப் போவதுமில்லை என நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா!

வியாழன் 24, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors


CSC Computer Education





Thoothukudi Business Directory