» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயனடையலாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:33:27 PM (IST)
பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி கல்வி பயின்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

அவ்வில்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு தேவையான கல்வி, உணவு, இருப்பிடம், திறன் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு தேவையான தங்கும் அறை, வகுப்பறைகள், நூலகம், மற்றும் கணிணி மற்றும் தட்டச்சு பயில்வதற்கான அறைகள் மற்றும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளன.
அரசின் வழிகாட்டுதலின்படி நியமனம் செய்யப்பட்ட ஆற்றுப்படுத்துநர்களால் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையின் மூலமாக குழந்தைகளுக்காக இல்லங்களிலேயே மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் கல்வி சுற்றுலா சென்று வருகின்றனர். மாவட்ட மற்றும் மாநில அளவில் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
எனவே, பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை 2 அரசு குழந்தைகள் இல்லங்களிலும் அரசு மானியம் பெற்று இயங்கிவரும் 8 குழந்தைகள் இல்லங்களிலும் தங்கி கல்வி பயின்று பயனடைய விரும்புவோர் மாவட்ட குழந்தைள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்து சுரபி பில்டிங், மணி நகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம் – 628 003 (தொலைபேசி எண்: 0461-2331188) என்ற முகவரியிலும், தூத்துக்குடி குழந்தை நலக்குழுவினை 176, முத்துமாலை பில்டிங் , மணி நகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம் – 628 003 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
