» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண் கட்டையால் அடித்து கொலை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 10:48:26 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபர் கட்டையால் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாரவிளையைச் சோ்ந்த லிங்கராஜ் மனைவி ஜெபா வயலட் (25). இவருக்கு 2முறை திருமணம் நடந்துள்ளது. கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை சோ்ந்த பெத்தையா மகன் மாரிக்கனி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாரிக்கனியை பாா்ப்பதற்காக ஜெபா வைலட் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவுக்கு வந்தாராம். அப்போது இருவரும் மாரிக்கனி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், மாரிக்கனி, ஜெபா வயலட்டை கட்டையால் தலையில் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த ஜெபா வயலட் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து மாரிக்கனியை கைது செய்தார். இந்த நிலையில், ஜெபா வயலட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மாரிக்கனி மீது தென்பாகம், ஆறுமுகனேரி காவல் நிலையங்களில் 4 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









