» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க வாக்குச்சாவடி குழுவில் உள்ள இளைஞர் அணி அமைப்பாளர்களுக்கான சமூகவலைதள பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற உள்ளன என்று தி.மு.க மாவட்ட செயலாளர், அமைச்சர் பி. கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி அமைப்பாளர்களுக்கான சமூக வலைதள பயிற்சிக் கூட்டம் ஏப்ரல் 19ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து நடைபெறுகிறது.அதே நாளில் மாலை 4 மணிக்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி குழுவில் உள்ள இளைஞரணி அமைப்பாளர்களுக்கான சமூகவலைதளப் பயிற்சிக் கூட்டம் கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி குழுவில் உள்ள இளைஞர் அணி அமைப்பாளர்களுக்கான சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் விளாத்திகுளம் G.V.மஹாலில் வைத்து நடைபெறுகிறது.
சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த சமூக வலைதள பயிற்சிக் கூட்டங்களில் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி குழுவில் உள்ள இளைஞரணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற உள்ள இளைஞரணி சமூக வலைதள பயிற்சிக் கூட்டங்களில் வாக்குச்சாவடி குழுவில் உள்ள இளைஞரணி அமைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் செய்து தருவதுடன் தாங்களும் அந்த கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










