» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மருதமலை முருகன் கோவிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதிதாக 184 அடி உயர மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும். திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory