» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஏப்.19ல் விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!
சனி 12, ஏப்ரல் 2025 4:42:21 PM (IST)
விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஏப்ரல் 19 (சனிக்கிழமை) விடுமுறை அளித்திட வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அனுப்பியுள்ள மனுவில், "விடைத்தாள் மதிப்பீட்டு முகாமானது +2 வகுப்பிற்கு கடந்த 04.04.25 முதல் தொடங்கி மதிப்பீட்டுப் பணிகள் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் நடைபெற்று வருகின்றன. வருகின்ற 19.04.25 சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஒரு நாள் விடுமுறை அளித்திட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறைக்கும் தேர்வுத் துறைக்கும் கோரிக்கையை வைக்கின்றோம்..
கிறிஸ்தவர்களின் முக்கிய தினங்களாக ஏப்ரல் 17ஆம் தேதி பெரிய வியாழன், ஏப்ரல் 18 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 20 ஆம் தேதி ஈஸ்டர் டே என்ற அடிப்படையில் முக்கிய தினங்கள் கொண்டாடப்பட இருக்கின்றன. ஏப்ரல் 19 ஆம் தேதி ஹோலி சாட்டர்டே வர இருப்பதால் அன்றைய தினத்தில் முகாமிற்கு விடுமுறை அளித்திடவும், கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டும் விடுமுறை அளித்திட கனிவுடன் கோரிக்கையை வைக்கின்றோம்..
மேலும் வெள்ளி ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்கும், மற்றைய ஆசிரியர்களுக்கும் 19.04.25 சனிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அளிப்பதால் தொடர்ந்து செய்யும் பணிகளுக்கு சிறு ஓய்வாகவும், அடுத்து வருகின்ற நாட்களில் புத்துணர்ச்சியுடன் பணியாற்றுவதற்கும்
வழிவகுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வரும் ஏப்ரல் 19.04.25 சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு விடுமுறை அளித்திட கேட்டுக் கொள்கிறோம்..
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் ஆகியோர்களுக்கும் உரிய நடவடிக்கைக்காக TNPGTA மாநிலக் கழகத்தின் சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயனடையலாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:33:27 PM (IST)
