» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:51:23 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (07.04.2025) நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 972 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 75 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி - IV தேர்வில் வெற்றி பெற்ற 14 தேர்வர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் ஒதுக்கீடுசெய்யப்பட்ட தட்டச்சர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை மாவட்டஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 இலட்சம் வீதம் 2 இலட்சத்திற்கான காசோலைகள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகைத்துறையினர் நலன் கருதி, பத்திரிகைத்துறையில் சுமார் 18 ஆண்டுகள் பணியாற்றி,
பணிகாலத்தில் உயிரிழந்த 2 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப உதவி நிதியாக தலா ரூ.3.75 இலட்சத்திற்கான காசோலைகள் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.9.50 இலட்சத்திற்கான காசோலைகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,64,900 மதிப்பிலான செயற்கை அவயங்களையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.94,500 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் மானியமாக ரூ.1,66,500/-க்கான காசோலைகளையும் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.13,75,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
மேலும், மாநில அளவில் சிறப்புப் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று, தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ள மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி பாரட்டினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குடிநீர் திட்டப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
சனி 12, ஏப்ரல் 2025 8:03:54 PM (IST)

பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
சனி 12, ஏப்ரல் 2025 7:59:19 PM (IST)

காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார்
சனி 12, ஏப்ரல் 2025 5:48:23 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்
சனி 12, ஏப்ரல் 2025 5:00:17 PM (IST)

விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஏப்.19ல் விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!
சனி 12, ஏப்ரல் 2025 4:42:21 PM (IST)

தூத்துக்குடி பள்ளியில் நிழல் இல்லா நேரம் செயல் விளக்க பயிற்சி!
சனி 12, ஏப்ரல் 2025 3:13:39 PM (IST)
