» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்க நடவடிக்கை: ஆட்சியரிடம் சமக கோரிக்கை!

திங்கள் 7, ஏப்ரல் 2025 9:25:32 PM (IST)



ராமசாமிபுரம் பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 3 கிலோ மீட்டரில் அமைந்துள்ள ராமசாமிபுரம் மற்றும் முத்து நகர் ஊர்களில் 200 வீடுகள் உள்ளது சுமார் 800 பேர் வசிக்கின்றனர். 

அங்கு செந்தில்குமரன் எனும் மேல்நிலைப்பள்ளி உள்ளது ராமசாமிபுரம் பொதுமக்கள்,  கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படிப்புக்கும் மருத்துவமனைக்கும் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கும் அரசு அலுவலகங்கள் சென்று வருவதற்கும் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் திசையன்விளை நாகர்கோவில் திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். அவர்கள் சென்று வரக்கூடிய ராமசாமிபுரம் பஸ் நிறுத்தத்தில் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் மற்றும் திசையன்விளை செல்லும் அரசு பேருந்துகள் நிற்பதில்லை கேட்டால் அந்த இடம் அரசு பேருந்துகள் நிறுத்தும் பஸ்ஸ்டாப் கிடையாது. 

ஆகவே நிறுத்த மாட்டோம் என்று கூறி பொதுமக்களை ஏற்றாமல் புறக்கணிக்கிறார்கள் ஆகவே அந்த மக்கள் மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து 3 கிலோமீட்டர் பிரயாணம் செய்து திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும் அவர்கள் செல்லக்கூடிய பேருந்துகள் மீண்டும் அந்த ஊர் வழியாகத்தான் செல்கின்றது இதனால் அந்த பகுதி மக்களுக்கு கால விரையங்களும் போக்குவரத்து சிரமங்களும் அதிக அளவில் ஏற்படுகிறது ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ராமசாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று  பொதுமக்களை ஏற்றி இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட துணைச் செயலாளர்கள் சூசைமுத்து, அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சின்னத்துரை மற்றும் முருகன், சுந்தர் உள்பட பலர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory