» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:02:38 PM (IST)



பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே போட்டா - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் ச.சந்தணராஜ்,  த.தொ.ப. ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மா.சிவன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்  மாவட்டத் தலைவர் ஜெ.இராஜதுரை ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்டத் தலைவர் மு.மூக்கையா,  அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ். கனகவேல், மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.தொ.ப.ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் செ.அருள்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஒப்புதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், தமிழக அரசு 2020 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைத்துள்ள சரண விடுப்பு பணப்பலளை உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும், ஏழாவது ஊதியக்குழு 21 மாத நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் குமரேசன், சு.வீரக்குமாரசாமி, ராமச்சந்திரன்,  ராஜ்குமார், ஞானஆசீர், ச. ராஜா, மா.சண்முகம், பொ. ஜீவா, த.ஜெகதீசன், மு.அப்துல் ரசாக், செ. ஆறுமுகராஜ், செல்வநாதன், ர.முருகன், முருகேசன், மாயாண்டி உட்பட பலர் கலந்து காெண்டனர். நிறைவாக த.தொ.ஆ.கூட்டணி மாவட்டப் பொருளாளர், அமாரிகணேஷ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors




CSC Computer Education




Thoothukudi Business Directory