» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விளக்கம்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? என்பது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விளக்கம் அளித்தது.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் ரேவதி, பியூலா உள்பட பல்வேறு முக்கிய சாட்சிகள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சக்திவேல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சாத்தான்குளம் வழக்கு விசாரணை தாமதமாவது ஏன்? என கேள்வி எழுப்பினார். அதற்கு சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. எனவே பொறுப்பு நீதிபதிதான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் கைதான போலீசார் சார்பில் ஒவ்வொரு சாட்சியும் தனித்தனியாக விசாரிக்கப்படுகின்றனர். மனுதாரர் கூட இந்த வழக்கின் சாட்சிகளை நேரடியாக விசாரித்து வருகிறார். இதன் காரணமாக விசாரணை தாமதமாகி வருகிறது. இந்த வழக்கு விசரணையை 2 மாதத்தில் முடிக்க மதுரை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதுகுறித்து சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:27:31 PM (IST)

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க நடவடிக்கை: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:41:02 PM (IST)

பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:32:16 PM (IST)

கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:51:35 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)
