» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக வலைதளங்களில் பரவும் ஜிபிலி படங்கள் : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

வியாழன் 3, ஏப்ரல் 2025 3:40:08 PM (IST)

சமூக வலைதளங்களில் ஜிபிலி படங்களை வெளியிடுவதால் மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட ஜிபிலி (Ghibli) படங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இதனால் இணையவாசிகள் பலர் தங்களது படங்களை ChatGP உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தளங்களில் பதிவேற்றம் செய்து ஜிபிலி படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

இணையவாசிகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலதரப்பு மக்களும் தங்களது ஜிபிலி படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். முதலில் குறிப்பிட்ட சில பயனீட்டாளர்களால் மட்டுமே ChatGP மூலம் ஜிபிலி படங்களைத் தயாரிக்க முடிந்தது. தற்போது பெரும்பாலானவர்களால் அதை இலவசமாகச் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சோஷியல் மீடியாக்களில் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். டிரெண்டிங் மோகத்தில் நீங்கள் பதிவிடும் போட்டோ, பிறந்தநாள் தகவல்களை திருடி, அனுமதியின்றி உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இதனால், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது டிரெண்டாகும் OpenAI ஜிபிலி செய்தவர்கள் அவர்களது போட்டோ, DOB பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory