» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)



தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி உட்பட 4 புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி, ஏரல், செபத்தையாபுரம் ஆகிய 3 வழித்தடங்கள், கோவில்பட்டியில் இருந்து வெள்ளாளங்கோட்டை என 4 பகுதிகளுக்கான புதிய பேருந்துகள் சேவை தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. சமூக நலன்- மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 4 புதிய பேருந்து சேவைகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவா் கலைச்செல்வி, தூத்துக்குடி புகா் போக்குவரத்து கழக கிளை மேலாளா் ரமேஷ் பாபு, நகர கிளை மேலாளா் காா்த்திக், பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி கிளை மேலாளா் ஜெகநாதன் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து

ஏமாந்தவன்Apr 8, 2025 - 07:01:15 PM | Posted IP 172.7*****

ஒரு ரயிலாவது விட்டால் நல்லா இருக்கும் ல

G . SaravananApr 7, 2025 - 05:38:59 PM | Posted IP 162.1*****

அதேபோல் இராஜபாளையம் முதல் திருவேங்கடம், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாயல்குடி வழியாக வேளாங்கண்ணி வரை இரண்டு கோட்டங்கள் மூலம் புதிதாக ஆரம்பித்தால் நல்லது.... இரண்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory