» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் : டவுன் ஏ.எஸ்.பி.யை மாற்ற கோரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:58:18 AM (IST)

தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் கடந்த 2 நாட்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் டி. மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தொல்காப்பியன், செயலாளர் செல்வின், வழக்கறிஞர்கள் ரமேஷ் பாண்டியன், எஸ்எஸ்பி அசோக் ரூபராஜா, விஜய கீதா, முருகன், முனீஸ்குமார், ஸ்ரீநாத், கிறிஸ்டோபர் விஜயராஜ், எஸ்பி வாரியார் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் டி. மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு செய்தியாளரிடம் கூறும்போது "தூத்துக்குடியில் நீதிமன்ற விவகாரத்தில் டவுன் ஏஎஸ்பி மதன் தலையிடுவதோடு வழக்கறிஞர்களை மிரட்டுகிறார். மேலும் இவருக்கு உறுதுணையாக தென்பாகம் உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் எங்களை மிரட்டி பார்க்கிறார். ஆகவே ஏஎஸ்பிஐ இடமாற்றம் செய்ய வேண்டும்.
உதவி ஆய்வாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாளை 4ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுமுகமாக தீர்வு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படும். இல்லை என்றால் மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்று அவர் கூறினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:27:31 PM (IST)

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க நடவடிக்கை: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:41:02 PM (IST)

பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:32:16 PM (IST)

கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:51:35 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)
