» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயில் : கனிமொழி கருணாநிதி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 10:25:22 AM (IST)

சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைக்கும், தென் தமிழ்நாட்டின் தொழில் நகரமான தூத்துக்குடிக்கும் இடையே பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்,.பி.யுமான கனிமொழி கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து, "சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினை எதிர்கொள்ள, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம், தற்போதுள்ள முத்துநகர் எக்ஸ்பிரஸில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கு ஒன்றிய அரசு திட்டம் வைத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள், இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் இணைப்பு ரயில்களை மீண்டும் இயக்க திட்டமுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள்; சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என்று கனிமொழி எம்.பி. கேள்விகள் எழுப்பியிருந்தார்
இவற்றுக்கு மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், "சென்னை – தூத்துக்குடி இடையே தற்போது 12693/12694 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி பேர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் தினசரி சேவை இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக, இணைப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றனஅதாவது. 56724/56723 வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி பயணிகள் ரயில் 16127/16128 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 56725/56726 தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் 22667/22668 நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது புதிய ரயில்களுக்கான போக்குவரத்து தேவை, செயல்பாட்டு சாத்தியக் கூறுகள், நிதி உள்ளிட்ட வளங்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ரயில்வேயின் செயல் திட்டத்தில் இடம்பெறும்” என்று பதிலளித்துள்ளார்.
மக்கள் கருத்து
செய்யதுஉமர்Apr 5, 2025 - 10:17:17 PM | Posted IP 104.2*****
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும்
செய்யதுஉமர்Apr 5, 2025 - 10:08:46 PM | Posted IP 162.1*****
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் சேவை எப்போது நடைபெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் ரயில்வே துறையில் அதிக வருவாயை ஈட்டி தரும் தென் மாவட்டங்களை ஒன்றியரசு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது
SankarApr 5, 2025 - 09:43:29 PM | Posted IP 162.1*****
Central government must take steps to operate train on Day time between Thanjavur to Thoothukudi. (To and from). Vande bharat is only for rich people. Sankar
SelviApr 5, 2025 - 09:37:12 PM | Posted IP 162.1*****
Ladies compartment increase one box
SankarApr 5, 2025 - 08:01:29 PM | Posted IP 104.2*****
தேர்தல் வருதுல்ல
Gazzali from AdyarApr 5, 2025 - 07:32:43 PM | Posted IP 104.2*****
Want Vande Bharat
மணக்கண்ணன்Apr 5, 2025 - 04:35:54 PM | Posted IP 162.1*****
இந்தியாவில் தென்இரயில்வேயிலே வருமான வரும் பகுதிகள் தமிழ்நாடு தூத்துக்குடி சென்னை நெல்லை கன்யாகுமரி பகுதிகள்.
சா.சேவியர்Apr 5, 2025 - 02:11:54 PM | Posted IP 104.2*****
தூத்துக்குடி மக்கள் சென்னையில் இருந்து போவதற்கு எவ்வளவோ கஷ்டப்படும் எங்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு ரயில் முத்துநகர் மட்டும் தான் நீங்கள் இதை மனதில் கொண்டு எங்களுக்கு திருமதி கனிமொழி அவர்கள் சொன்ன மாதிரி எங்களுக்கு வந்தே பாரத் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் விட்டால் தூத்துக்குடி மக்கள் ஆகிய நாங்கள் பயன் பெறுவோம் இதனை நீங்கள் சீக்கிரமாக இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கின்றது தமிழ்நாட்டிலே தொழில் நகரமான தூத்துக்குடி மக்கள் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் மக்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் போக்குவரத்து மிகவும் கஷ்டப்படுகிறோம் நீங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தினால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகத்தில் இருக்கிற எல்லா மக்களுமே பயன்பெறுவார்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி
JanaApr 5, 2025 - 01:58:45 PM | Posted IP 104.2*****
New train route Thoothukudi to Madras (vio) Aruppukottai quick action in the கவர்மெண்ட்
GANESHApr 5, 2025 - 12:56:37 PM | Posted IP 104.2*****
தூத்துக்குடி திருச்செந்தூர் நேரடி ரயில் பாதை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் மூர்த்தி முயற்சி செய்ய வேண்டும்.
BhaskaranApr 5, 2025 - 10:55:12 AM | Posted IP 172.7*****
ஒப்புக்கு கேட்கப்பட்ட கேள்வி ரயில் விடவில்லை யென்றால் சென்னை ரயில்வே தலைமை அலுவலகம் முற்றுகை என்று போராட்டம் அறிவித்திருக்க வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:27:31 PM (IST)

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க நடவடிக்கை: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:41:02 PM (IST)

பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:32:16 PM (IST)

கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:51:35 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)

செய்யதுஉமர்Apr 5, 2025 - 10:20:57 PM | Posted IP 172.7*****