» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதன் 2, ஏப்ரல் 2025 11:44:15 AM (IST)



தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு.இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜை சுப்பிரமணிய பூஜைகள் நடைபெற்றது. 

தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. இதன் பின்னர் கொடி மரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 10ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 11ந் தேதி தீர்த்தவாரி, தபசு காட்சி நிகழ்ச்சியும், 12ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சீர்வாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory