» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் ஜெகத்ரட்சகன் எம்பி சுவாமி தரிசனம்
சனி 5, ஏப்ரல் 2025 4:57:27 PM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் கடலில் நீராடினர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி மான ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
அவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லக்கனி விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்தார். பின்னர் பேட்டரி கார் மூலம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், நகர செயலாளர் வாள் ஆர் சுடலை, நிர்வாகிகள் கேடிசி முருகன், தோப்பூர் சுரேஷ், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:38:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரம்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:28:22 PM (IST)

வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2பேர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:09:59 PM (IST)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:44:24 AM (IST)

தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:35:04 AM (IST)
