» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயியிடம் செல்போன் திருட்டு: 3பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:53:48 AM (IST)
முக்காணியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த விவசாயியிடம் செல்போனை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், முக்காணியிலுள்ள முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவர், கடந்த மார்ச் 31ம் தேதி இரவு காந்திநகர் படித்துறை அருகே செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, மது போதையில் வந்த அதே ஊர் சந்தனமாரியம்மன் கோயில் தெரு முருகன் மகன் முத்துராஜ் (24), ஆறுமுககுமார் (24), பெரியசாமி (40) ஆகியோர் அவரது செல்போனை திருடிச் சென்றனராம். கண்ணையா விரட்டிச் சென்றபோது, அவர்கள் அவதூறாகப் பேசி மிரட்டினராம். புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமசாமிபுரம் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்க நடவடிக்கை: ஆட்சியரிடம் சமக கோரிக்கை!
திங்கள் 7, ஏப்ரல் 2025 9:25:32 PM (IST)

ஹோட்டல் கழிவு நீர் தொட்டியில் விழுந்த குழந்தை : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:44:29 PM (IST)

மகாவீர் ஜெயந்தி விழா: ஏப்.10ல் டாஸ்மாக் கடகளை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:33:52 PM (IST)

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:26:59 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:51:23 PM (IST)

மீன், இறால் நோய்களைக் கண்டறிதல் பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அழைப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:47:05 PM (IST)
