» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்காணல்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:06:45 AM (IST)

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் மற்றும் திமுக பொறியாளர் அணி மாநில செயலாளர் கருணா ஆகியோர் அறிவுறுத்தலின்படி, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
நேர்காணலில் பகுதி நகர ஒன்றிய மற்றும் பேரூர் கழக திமுக பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொண்டனர். நேர்காணலில் பங்கேற்ற அனைவரிடமும் அவர்களது கட்சிப் பின்னணி, கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்கள் கேட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ஆபிரகாம், மாரிராஜ், ஜாபர், ரஞ்சித் மாநகர அமைப்பாளர் ரூபன் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஸ்ரீதர், பெரியசாமி, மாரிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தருவைக்குளம் கடற்கரை பகுதியில் எஸ்பி ஆய்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:41:37 PM (IST)

வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டண விலக்கு: எம்பவர் இந்தியா கோரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:03:57 PM (IST)

நாசரேத்தில் ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ பிறந்த நாள் விழா!
வியாழன் 3, ஏப்ரல் 2025 7:56:35 PM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:51:55 PM (IST)

முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் நடவடிக்கை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:03:31 PM (IST)

பெண் பயணிகள் பாதுகாப்பு வாட்ஸ்அப் குழு: தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:56:29 PM (IST)
