» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ பிறந்த நாள் விழா!
வியாழன் 3, ஏப்ரல் 2025 7:56:35 PM (IST)

நாசரேத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் முதன்மைச் செயலரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மறுமலர்ச்சி திமு.க. கட்சியின் முதன்மைச் செயலரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவின் 54வது பிறந்த நாள் விழா நாசரேத்தில் உள்ள நல்ல சமாரியன் மனநல வளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் வைத்து கொண்டாடப் பட்டது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் வே.இரஞ்சன், மாநில தேர்தல் பணிக்குழு முன்னாள் செயலர் குரு.மத்தேயு ஜெபசிங், பொதுக்குழு உறுப்பினர் இரா.மோகன்சிங், வெள்ளக்கோவில் மனோகரன், தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மூ.பாபுசெல்வன், தொண்டர் அணி துணைச் செயலர் கணேசன், ஆழ்வை ஒன்றிய துணைச் செயலர் லூ.மாசில்லாமணி, தொண்டர் அணிச் செயலர் வகுத்தை முத்து கிருஷ்ணன், இளைஞர் அணி துணைச் செயலர் தென்திருப்பேரை கண்ணன்,பிரகாசபுரம் வசிகர், ஆம்ஸ் கருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நாசரேத் நல்ல சமாரியன் இல்லத்தில் ம.தி.மு.க. வினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். பின்னர் காப்பகத்தில் உள்ள மனநல வளர்ச்சி குன்றியோருக்கு உணவு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி, ச.அரிகரன் மற்றும் நாசரேத்து பேரூர் செயலர் ஐ. இராபர்ட் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
