» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டண விலக்கு: எம்பவர் இந்தியா கோரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:03:57 PM (IST)
வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்கூரை சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மின் வாரியத்திற்கு கிரிட் மூலம் திருப்பி அனுப்பும் போது அந்த மின்சாரத்தை எடுப்பதற்கான கட்டணம் நெட்வொர்க் கட்டணம் ஆகும். இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்யுமாறு நீதி மன்றமும் ஏற்கனவே உத்திரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றமே தவறு என்று கூறியும் கூட இது போன்ற கட்டணம் வசூலிப்பதால் மின் நுகர்வோர்கள் மிகவும் பாதிக்கப்படுவதோடு தங்களது கூடுதல் உற்பத்திக்கான கட்டமைப்பை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். மேலும் வீட்டின் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு அனுப்பும் போது அதற்கான கட்டணத்தையும் தருவதில்லை.
எனவே வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும், மற்றும் வீட்டின் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்கப்பட்டால் அந்த மின்சாரத்திற்கான கட்டணத்தையும் வழங்க மின்சாரத் துறைக்கு ஆணையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
