» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:51:55 PM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் மற்றும் சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் வழக்கறிஞர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ரேவதி,துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி தொடங்கி வைத்தார். முகாமில் சார்பு நீதிபதி மாரிக்காளை,முனிசீப் நீதிபதி கருப்பசாமி,விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன்,குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரை செல்வன்,பீட்டர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மருத்துவர்கள் சிவ நாராயணன், சஞ்சய், ஆத்மிகா ஆகியோர் கலந்து கொண்டு எலும்பு சிகிச்சை மற்றும் மகளிர்களுக்கான சிகிச்சை அளித்தனர். அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், வழக்கறிஞர்கள் ஆழ்வார்சாமி, சிவக்குமார், போஸ் என்ற ஐயப்பன்,ரெங்கராஜன் மணிகண்டன், நாகராஜன், சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், மாரிக்கண்ணன், வளவன்,பாரதி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
