» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் நடவடிக்கை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!

வியாழன் 3, ஏப்ரல் 2025 5:03:31 PM (IST)

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்புகள் கோரி வரப்பெறும் மனுக்கள் பொது நலம் கருதி விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் முறைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மாநகரின் ஒரு சில பகுதிகளில் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் தன்னிச்சையாக குடிநீர் இணைப்புகள் முறைகேடாக எடுக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வரப்பெற்றதன் அடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டதில் நேதாஜி நகர் மற்றும் ஆசிரியர் காலனி பகுதிகளில் வீட்டிணைப்புகள் மாநகராட்சி கட்டணம் ஏதுமின்றி அனுமதி பெறாமல் மாநகராட்சியின் பிரதான குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் இணைப்புகள் எடுக்கப்பட்டுள்ளது .

இதையடுத்து மேற்படி வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன். உரிமையாளர்கள் மற்றும் இச்செயலுக்கு காரணமான பணியாளர்கள் மீதும் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையினை முறையாக தொடர்புடைய அலுவலகங்களில் மனுக்களாக சமர்ப்பித்து உரிய அனுமதி பெற்று பணியினை செய்யுமாறும் மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பியூலாApr 4, 2025 - 01:23:38 PM | Posted IP 104.2*****

இதுக்கு மாநகராட்சி வேண்டாம்னு போராட்டம் நடத்தியிருந்துக்கலாம் னு தோனுது பழையப்படி பஷ்சாயத்து முறைய கொண்டுவந்துருக்கலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory