» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை: போலீசார் விசாரணை
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:22:12 AM (IST)
கோவில்பட்டியில் ரயில் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (42). இவர் கோவையில் ஒரு விடுதி மெஸ்சில் பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டிக்கு வந்து உள்ளார். கடந்த 30-ந் தேதி ரயில் தண்டவாளம் அருகே அமர்ந்து இருந்த அவர், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தருவைக்குளம் கடற்கரை பகுதியில் எஸ்பி ஆய்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:41:37 PM (IST)

வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டண விலக்கு: எம்பவர் இந்தியா கோரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:03:57 PM (IST)

நாசரேத்தில் ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ பிறந்த நாள் விழா!
வியாழன் 3, ஏப்ரல் 2025 7:56:35 PM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:51:55 PM (IST)

முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் நடவடிக்கை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:03:31 PM (IST)

பெண் பயணிகள் பாதுகாப்பு வாட்ஸ்அப் குழு: தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:56:29 PM (IST)
