» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் திருட்டு: 2 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!
திங்கள் 31, மார்ச் 2025 8:10:02 AM (IST)
கழுகுமலையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை திருமாளிகை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் காலேப்ராஜ் (28). டிரைவர். சம்பவத்தன்று இரவில் இவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலையில் பார்த்தபோது மர்மநபர்கள் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்துஅவர் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனும், 17 வயது சிறுவனும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அந்த 2 சிறுவர்களும் தூத்துக்குடி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு
புதன் 2, ஏப்ரல் 2025 3:50:12 PM (IST)

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தர்ப்பூசணி பழங்கள் வழங்கல்!
புதன் 2, ஏப்ரல் 2025 12:41:42 PM (IST)

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 11:44:15 AM (IST)

தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கொடை விழா : முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம்!
புதன் 2, ஏப்ரல் 2025 11:34:56 AM (IST)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து 19 பவுன் நகைகள் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
புதன் 2, ஏப்ரல் 2025 11:25:12 AM (IST)

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் : 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782பேர் பங்கேற்பு!
புதன் 2, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)
