» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கொடை விழா : முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம்!
புதன் 2, ஏப்ரல் 2025 11:34:56 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முளைப்பாாி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கொடை விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில், தினமும் மாலையில் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, கோலாட்டம், கும்மியாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொடை விழாவின இறுதிநாளன்று காலை அக்னி சட்டி, பால்குடம் எடுத்து ரத வீதி உலா வந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரணை நடந்தது. அதன்பின்பு இரவு 7 மணிக்கு நடந்த 1008 மாவிளக்கு, 108முளைப்பாாி, நடந்தது. ஊர்வலத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக அவருக்கு கோவில் அறங்காவலர் குழு சார்பில் வரவேற்பு கொடுக்கப் பட்டது.

விழாவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா, அறிவழகன் அறங்காவலர்கள் பாலகுருசாமி, மகாராஜன், சிவன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர் ஆறுமுகம், பகுதி திமுக செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் சுரேஷ் மகாராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மற்றும் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முன்னாள் அறங்காவலர் அறிவழகன், உள்பட பலர் கலந்து காெண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:44:42 AM (IST)

பிரதமரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:39:55 AM (IST)

வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:30:41 AM (IST)

வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கல்: வியாபாரி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:11:49 AM (IST)

தூத்துக்குடியில் மீன் விலை குறைந்தது: வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 8:58:09 AM (IST)

சிறுவனைத் தாக்கி கொலை மிரட்டல்: டிரைவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:28:56 PM (IST)
