» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் ஒன்றிணைய வேண்டும் : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
சனி 5, ஏப்ரல் 2025 8:15:49 PM (IST)
தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இப்பவே மத்திய அரசு நம்மை கண்டும் காணாமல் உள்ளது. நமது கொள்கைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துரைப்பது சவால் ஆகிவிடும். நமது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்கள் அனைவரும் இதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைக்கப்படுகிறது. மொழியில் நாம் கட்டாயப்படுத்த படுகிறோம். அதற்காக கல்விக்கான நிதி வழங்கவில்லை.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழக மக்களுக்காக தமிழ் மொழிக்காக தமிழக முதல்வர் நல்லாட்சி புரிந்து வருகிறார். ஒன்றிய பாஜக அமைச்சர்கள் அமைதி காக்கின்றனர். ஒரு தெளிவான முடிவை இதுவரைக்கும் நமக்கு தெரிவிக்கவில்லை. திருவண்ணாமலையில் சத்துணவில் முட்டை கேட்ட மாணவர் மீது தாக்குதல் நடத்திய சமையலர், சமையல் உதவியாளர் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளோம். இளம் சிறார் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:02:03 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை: ஆயர் தலைமையில் உண்ணாவிரதம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:34:38 AM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:24:56 AM (IST)

கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் உதவி : சுயஉதவிக்குழு மகளிருக்கு ஆட்சியர் அழைப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:22:47 AM (IST)

வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாப பலி
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:56:58 AM (IST)

தூத்துக்குடி திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
புதன் 9, ஏப்ரல் 2025 8:36:13 PM (IST)
